முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்காக ஜாஹிர்கான் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஆக. 12 - ஐ.சி.சி.யின் சிறந்த வீரருக்கான விருது தேர்வு பட்டியலில் இந்திய கிரி க்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் 3 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். தவிர, டிராவிட், டெ ண்டுல்கர், கேப்டன் தோனி ஆகியோர் 2 விருதுக்கு பரிந்துரை செய்ய ப்பட்டு உள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு - 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டு தோறும் சிறந்த வீரர் களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கன ஐ.சி.சி. விருது செப்டம்பர் மாதம் 12 -ம் தேதி லண்டனில் வழங் கப்படுகிறது. 

ஐ.சி.சி. விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள் விபரம் வெளியி டப்பட்டு உள்ளது. இந்திய அணியின் வேகப் பந்து வீரர் ஜாஹிர்கான் 3 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார். 

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நா ள் போட்டிக்கான வீரர் ஆகியவற்றில் அவரது பெயர் இடம் பெற்று உள்ளது. ஜாஹிர்கான் இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக பாதியில் விலகியுள்ளார். 

தசைப் பிடிப்பு மற்றும் கணுக்கால் காயம் காரணமாக அடுத்த 4 மாத த்துக்கு அவரால் எந்தப் போட்டியிலும் பங்கேற்க இயலாது. கான் தவிர, டிராவிட், டெண்டுல்கர், கேப்டன் தோனி ஆகிய வீரர்களும் 2 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர். 

ஜாஹிர்கானைப் போலவே வெளிநாட்டு வீரர்களில் ஜோனாதன் டிராட், சுவான் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் , ஹசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா), வாட்சன்(ஆஸ்திரேலியா) ஆகிய வீரர்களும் 3 விருதுக் கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர். 

ஐ.சி.சி. விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய வீரர்கள் வருமாறு - ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் - ராகுல் டிராவிட், டெண்டுல்கர், ஜாஹிர்கான். 

சிறந்த டெஸ்ட் வீரர் - டிராவிட், டெண்டுல்கர், ஜாஹிர்கான், இஷாந் த் சர்மா, ஹர்பஜன் சிங். 

சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் - தோனி, காம்பீர், ஜாஹிர்கான், விராட் கோக்லி, யுவராஜ் சிங், சேவாக், முனாப் படேல். 

சிறந்த புதுமுக வீரர் - அபினவ் முகுந்த். 

இந்திய அணிக் கேப்டன் தோனி மக்கள் தேர்வு செய்த சிறந்த ஒரு நா ள் போட்டி வீரர் பட்டியலிலும் இடம் பெற்று உள்ளார். சிறந்த வீரா ங்கனைகளுக்கான பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஜூலன் கோஸ் வாமி, பூனம் ரவுத் இருவரும் இடம் பெற்று உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்