முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சகர் அலுவகத்தில் சந்தேகத்திற்கு இடமான கருவிகள்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.13 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பல கருவிகள் இருந்தன என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் சில கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கருவிகள், பிரணாப் முகர்ஜியின் செயல்பாடுகளை கண்காணிக்க பொருத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது குறித்து புலனாய்வு அதிகாரிகள் பிரணாப் அலுவலகத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில கருவிகள் இருப்பது தெரியவந்தது என்று நேற்று லோக்சபையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நிதி இணை அணைச்சர் பழனிமாணிக்கும் பதில் அளிக்கையில் கூறினார். இந்த கருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முக்கியமான அமைச்சகங்களின் அலுவலகங்களில் தினமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் அலுவலகத்தில் சில கருவிகள் இருப்பது குறித்து தகவல் கொடுத்தது. அதன்பேரில் சோதனையில் ஈடுபட்டு அந்த கருவிகள் எடுக்கப்பட்டது. அந்த கருவிகளின் தன்மை என்ன என்பது குறித்தும் புலனாய்வு இயக்குனரகம் ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புலனாய்வு உத்தரவிடப்பட்டது. அந்த கருவிகள் குறித்து ரசாயனம் மற்றும் தடவியல் சோதனை நடத்தப்பட்டது. அதில் பபிள்கம் போன்ற ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது. இந்த கருவிகள் எடுக்கப்பட்டதில் இருந்து இதர முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்கள் தினமும் சோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாதிரியான பொருள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் பழனிமாணிக்கம் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்