முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.14 - தான் மேற்கொள்ள இருக்கும் உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக மத்திய அரசு மசோதா ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஊழலுக்கு எதிரான இந்த லோக்பால் மசோதாவில் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோரை சேர்க்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து தனது கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 16 ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க அன்னா ஹசாரே முடிவு செய்துள்ளார். இவரது இந்த உண்ணாவிரதத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள டெல்லி போலீசார், ஜே.பி. பூங்காவில் ஹசாரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளனர். மேலும் இந்த உண்ணாவிரதம் இரண்டரை நாட்களுக்கு மேல் போகக்கூடாது என்றும், இந்த போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்னா ஹசாரே திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தான் திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், போலீசார் விதித்துள்ள தடையை மீறப்போவதாகவும் கூறியுள்ள அன்னா ஹசாரே, தன்னை போலீசார் கைது செய்தால் அதையும் சந்திக்க தான் தயாராக உள்ளதாகவும், சிறைக்குள் தள்ளினாலும் அதை ஏற்றுக்கொள்ளவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்