முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இருந்து வரும் கள்ளநோட்டால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.- 5 - பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு கடத்தி கொண்டு வரப்படும் கள்ளநோட்டுக்களால் இந்தியாவுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டிவிடுவதிலேயே குறிக்கோளாக பாகிஸ்தான் குறிக்கோளாக இருக்கிறது. இதற்கு தேவையான இந்திய பணத்தை தீவிரவாதிகளுக்கும் அவர்களின் அமைப்புகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் கொடுக்க தகுதி இல்லை. அதனால் குறுக்கு வழியில் பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவோடு அந்த நாட்டில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளும் பிரிவினைவாத அமைப்புகளும் சேர்ந்து மிகவும் நவீன தொழில்நுட்பம் உடைய இயந்திரத்தில் இந்திய ரூபாய் மாதிரி கள்ளநோட்டு அடித்து அதை கடல் வழியாகவும் நேபாளம் வழியாகவும் ஜம்மு-காஷ்மீர் வழியாகவும் இந்தியாவுக்கு கடத்தி கொண்டுவந்து தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் கொடுக்கப்படுகிறது.

 இது இந்தியாவுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறையுடன் இணைந்துள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி பாகிஸ்தானில் இருந்து கள்ளத்தனமாக அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுக்களால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கும்படியும் உள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்