முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து: கயானா அணியை எதிர்கொள்கிறது இந்தியா

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

போர்ட் ஆப் ஸ்பெயின்,ஆக.24 - டிரினிடாட் டொபாகோ நாட்டு அணியிடம் இந்திய கால்பந்து அணி 0 - 3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அமெரிக்க கண்டத்தில் உள்ள கரிபியன் பகுதி நாடான டிரினிடாட் - டொபாகோவுக்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் 0 - 3 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்ந்தது. சமீப காலமாக இந்திய கால்பந்து அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது தோல்வியடைந்துள்ளது. கரிபியன் சுற்று பயணத்தின் அடுத்த போட்டியில் இந்தியா, கயானா அணியை இன்று எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்