முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

டோக்கியோ, செப்.- 1 - ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பான் இந்த ஆண்டில் பயங்கர நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுமின்நிலைய கதிர்வீச்சு பாதிப்பு என அடுத்தடுத்து பல பேரிடர்களை சந்தித்தது. சங்கிலித் தொடர்போன்ற இந்த பேரிழப்புகளால் ஜப்பான் நிலைகுலைந்தது. இதனால் அங்கு பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.  இந்த இழப்புகளை நீக்க முன்னாள் பிரதமர் நவோட்டோ கான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதைத் தொடர்ந்து நவோட்டாகான் கடந்த மாதம் 26 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஜப்பான் ஜனநாயகக் கட்சி தேர்தல் நடத்தியது. இதில்  5 பேர் பிரதமர் பதவிக்காக போட்டியிட்டனர். இறுதியில் 215 ஓட்டுகளைப் பெற்ற யோஷிஹிக்கோ நோடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2010 ம் ஆண்டு நோடா ஜப்பானின் நிதியமைச்சராக இருந்து ஜப்பானின் நிதிநிலையை உயர்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் 6 வது பிரதமராக நோடா பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்