முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் கனமழை - 100 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,செப்.6 - இந்தியாவின் மேற்கு அண்டை நாடான பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு 100 பேர் பலியாகிவிட்டனர். சுமார் ஒரு கோடி பேர் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். பாகிஸ்தானில் கடந்தாண்டை மாதிரி இந்தாண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்தாண்டு பெய்த மழைக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேதம் அடைந்தது. 2 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகினர். இந்தாண்டும் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்து, கிழக்கு மாகாணமான பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கடந்த பல நாட்களாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் ஒரு கோடி பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த இரண்டு மாகாணங்களிலும் உள்ளவர்களில் பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என்று பாகிஸ்தான் தேசிய பேரழி நிர்வாக ஆணைய தலைவர் ஜாபர் இக்பால் கதீர் தெரிவித்துள்ளார். இவர்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீரில் நோய் கிருமிகள் உருவாகி பரவாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கனமழை மேலும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெள்ள நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்