முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க கிரீடத்தை தர முடியாது: திருப்பதி தேவஸ்தானம்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

திருப்பதி,செப்.11 - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி திருப்பதி வெங்கடாசலபதி சுவாமிக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் காணிக்கையாக செலுத்தியதை திருப்பி தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்களின் மனப்போக்காகும். ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று இறைவனை கேட்டுக்கொள்வதும் அதற்கு நன்றிக்கடனாக காணிக்கை செலுத்துவதும் பக்தர்களிடையே வாடிக்கையாகும். இந்த மாதிரி பெரிய பணக்காரர்களும், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் திருப்பதி வெங்கடாசலபதியை வேண்டிக்கொண்டு தாங்கள் காரியம் நடத்தவுடன் நேர்ந்தபடி காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இதேமாதிரி கர்நாடக மாநில பாரதிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஒரு பெரிய சுரங்க அதிபராகும். அவருக்கு கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுரங்கள் உள்ளன. அதிலிருந்து தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அவர் திருப்பதி வெங்கடாசலபதி சுவாமிக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி வழங்கியுள்ளார். இந்த கிரீடத்தின் எடை 30 கிலோ, இரண்டரை அடி உயரம் உள்ளது. 

இந்தநிலையில் இவர் மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மாநில லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனையொட்டி இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை சி.பி.ஐ.போலீசார் கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்துள்ளனர். இந்த மாதிரி ஊழல் மற்றும் நாட்டின் சொத்தை சுரண்டி அதிலிருந்து காணிக்கையாக தங்க கிரீடம் காணிக்கையாக செலுத்தியிருப்பதை திருப்பதி தேவஸ்தானம் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கோரி போராட்டமும் நடந்துள்ளது.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி காணிக்கையாக அளித்ததை திருப்பி தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயில் விதிமுறைகளின்படி காணிக்கை திருப்பி தரப்படுவதில்லை. இந்த விதிமுறை ஜனார்த்தன் ரெட்டிக்கும் பொருந்தும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் தங்க கிரீடம் வழங்கப்பட்டது தொடர்பாக எந்த தகவலை புலனாய்வு அமைப்பினர் கேட்டாலும் சரி அல்லது தங்க கிரீடத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டாலும் சரி அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். 

ஆந்திராவில் உள்ள ஓபலாபுரத்தில் ஜனார்த்தன ரெட்டி கள்ளத்தனமாக சுரங்கம் வெட்டி தொழில் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்