முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பினாயக்சென்னுக்கு ஜாமீன் கிடைக்குமா? 11 ம் தேதி விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.- 6 - நக்சலைட்டுகளுடன் தொடர்பு மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டுகளின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை பிரமுகர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது வரும் 11 ம் தேதி தெரியும். இவரது ஜாமீன் மனு மீதான கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் வரும் 11 ம் தேதி விசாரிக்கிறது. 

பினாயக்சென்(61), சத்தீஸ்கர் ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை கடந்த பிப்ரவரி 10 ம் தேதியன்று நிராகரித்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இவர் வேலூரில் மருத்துவராக பணியாற்றியவர். தன்னை நீதிமன்றம் தண்டிக்கும் விஷயத்தில் தவறு இழைத்து விட்டது. காரணம் என் மீதானகுற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறும் பினாயக்சென் தன்னை ஜாமீனில் விடக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்