முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங்கிற்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் கிடைத்தது

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.- 16 - சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிற்கு டெல்லி கோர்ட்டு நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அவருக்கு நிரந்த ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணை வருகின்ற 19-ம் தேதி நடைபெறும் என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது அமெரிக்காவுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் 70 பேர் இருந்ததால் மன்மோகன் அரசு மெஜாரிட்டியை இழந்தது. இதனையொட்டி பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் நம்பிக்கை ஓட்டு கோரினார். இதற்கு ஆதரவாக வாக்களிக்கக்கோரி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில் தீவிர விசாரணை நடத்தியதில் எம்.பி.க்களுக்கு  அமர்சிங் மூலம்தான் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ஆஜராகும்படி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமர்சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையொட்டி கடந்த 6-ம் தேதி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அமர்சிங் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் 9 நாட்கள் வைக்கப்பட்டார். அமர்சிங் சிறையில் இருக்கும்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் கோர்ட்டில் ஜாமீன்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு வருகின்ற 19-ம் தேதி வரை அமர்சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சிறப்பு கோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா ஷெகல் உத்தரவு பிறப்பித்தார். ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் அதே அளவுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தின்பேரில் அமர்சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டெல்லியை விட்டு வேறு எங்கேயும் போகக்கூடாது என்றும் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அமர்சிங்கின் நிரந்தர ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அமர்சிங்கிற்கு ஏற்கனவே சிறுநீரக ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. திகார் சிறையில் அவர் இருக்கும்போது திடீரென்று உடல்நிலை பாதித்தது. உடனே அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்