முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி உண்ணாவிரதத்தின் 3 நாள் செலவு கணக்குஎன்ன? குஜராத்கவர்னர்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

ஆமதாபாத்,செப்.- 27 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த 17 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை 3 நாட்கள் ஆமதாபாத்தில் உண்ணாவிரதம் இருந்தார் அல்லவா. இந்த 3 நாள் உண்ணாவிரதத்தின் செலவு கணக்கு என்ன? என்று அம்மாநில கவர்னர் கமலாபெனிவால் கேட்டிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் பனிப்போர் வெடித்துள்ளது.  குஜராஜ் முதல்வர் நரேந்திர மோடி கடந்த 17 ம் தேதி அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் பல்கலைக் கழக மாநாட்டு மையத்தில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரதத்தில் தமிழகத்தின் சார்பில் அ.தி.மு.க. எம்.பிக்கள் கலந்து கொண்டார்கள். மற்றும் திரளான பா.ஜ.க. தலைவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த உண்ணாவிரதம் 19 ம் தேதி முடிவடைந்தது. 

இந்நிலையில் இந்த 3 நாள் உண்ணாவிரதத்தின் செலவு கணக்கு என்ன என்று அம்மாநில கவர்னர் கமலா பெனிவால் கேட்டிருக்கிறார். ஏற்கனவே முதல்வர் மோடிக்கும், இவருக்கும் இடையே லோக் அயுக்தா அமைத்தது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கவர்னரை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார் முதல்வர் மோடி. இந்த நிலையில் மோடி அரசில் அமைச்சராக இருந்த ஜடாபியா என்பவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி புதுக்கட்சி தொடங்கினார். இவர் மோடி உண்ணாவிரதத்திற்காக அரசு செலவழித்த செலவில் பொதுமக்கள் பணம் தவறாக கையாளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதை தொடர்ந்தே மாநில கவர்னர் கமலா , அம்மாநில கூடுதல் தலைமை செயலாளருக்கு தனது முதன்மை செயலாளர் அரவிந்த் ஜோஷி மூலம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜடாபியாவின் குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு அதற்கு பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார் கவர்னர். மோடியின் உண்ணாவிரதத்திற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று அந்த கடிதத்தில் கவர்னர் கேட்டுள்ளார்.இதன் மூலம் முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்