முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி: 10 நாடுகள் போட்டி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

ஐ.நா.அக்.21 - ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் உள்பட 10 நாடுகள் போட்டியிடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக விளங்குகிறது பாதுகாப்பு சபை. இது அதிகாரம் படைத்த சபையாகும். இந்த சபையில் நிரந்தர உறுப்பினர்கள் என்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் என்றும் உள்ளன. நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இந்தியா உள்பட 10 நாடுகள் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பதவியில் இந்தியா வரும் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய இருக்கும். இந்தநிலையில் நிரந்தரமற்ற 10 உறுப்பு நாடுகளில் 5 நாடுகளின் உறுப்பினர் பதவி வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. கிர்ஜிஸ்தான், மெளரிதானியா, மொராக்கோ, பாகிஸ்தான், தோகா, அஜெர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவேனியா, கெளதமாலா ஆகிய 9 நாடுகள் இந்த நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றன. ஏற்கனவே இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 3 முறை நிரந்தரமற்ற உறுப்பினர் பதவியை வகித்துள்ளன. ஆனால் இன்று நடக்கும் தேர்தல் குறித்து இருநாடுகளின் ஐ.நா. தூதர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருநாடுகளின் தூதர்களிடையே நல்லுறவு நீடிக்கிறது. அதேசமயத்தில் பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவை தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருவதோடு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து,ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா மட்டும் இன்னும் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் பாதுகாப்பு சபையில் சீனாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு பெரும் முயற்சியை மேற்கொண்டார். அந்த உதவியை சீனா நினைத்து பார்க்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்