முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானின் எதிரி அமெரிக்காதான் இம்ரான்கான் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், அக். - 25 - இந்தியாவை காட்டிலும் அமெரிக்காதான் பாகிஸ்தானின் மிகப் பெரும் எதிரி என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  கொலம்பியா இதழியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறுகையில், இந்தியாவை ஓர் அந்நிய மிரட்டலாக நான் கருதவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கை முடிவுக்கு வருவதற்கான காலகட்டம் இது. இரு நாடுகளும் புத்தம் புதிய உறவினை நோக்கி செல்ல வேண்டும். இந்தியாவுக்கு பாகிஸ்தான் தேவை. பாகிஸ்தானுக்கு இந்தியா தேவை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மையப்புள்ளியாக இருப்பது காஷ்மீர். இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 முறை போர் நடந்திருந்தும் அமெரிக்காவே பெரும் எதிரியாக தோன்றுகிறது. பாகிஸ்தான் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கைகளால் இந்தியாவை காட்டிலும் பெரிய எதிரியாக அமெரிக்காவை எனது நாட்டு மக்கள் நினைக்கின்றனர். பாகிஸ்தானின் அமெரிக்க கொள்கைகள் என்ன சாதித்து விட்டன. 80 சதவீத பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவை எதிரியாக நினைக்க தொடங்கி விட்டனர். பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி அமெரிக்காவின் எடுபிடி என்றே கருதப்படுகிறார். பாகிஸ்தான் சுயமரியாதை உள்ள நாடாக இருக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் அடிமையாக இல்லாமல் நண்பனாக பாகிஸ்தான் விளங்க முடியும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்