முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அணு உலை மீண்டும் வெடித்தது

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

சோமா,மார்ச்.15 - ஜப்பானில் அணுஉலை மீண்டும் வெடித்து சிதறியது. இதில் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். கதிர்வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணுஉலையில் இருந்து புகைமண்டலம் வெளியேறுகிறது. ஜப்பானில் கடந்த 11-ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதோடு பசிபிக் கடலில் இருந்து சுனாமி வீசியதில் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு கடலோர பகுதிகள் கடுமையாக பாதித்தது. ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 

அதோடுமட்டுமல்லாது புகுஷிமா அணுஉலையின் ஒரு பகுதி நேற்றுமுன்தினம் வெடித்து சிதறியது. அதனால் அணுக்கதிர் வீசியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் அதே அணுஉலையில் உள்ள 3-ம் நம்பர் அணுஉலையில் நேற்றுமுன்தினம் கோளாறு ஏற்பட்டது. தண்ணீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது.  அணுஉலைக்கு அழுத்தம் அதிகமானதால் அந்த அணுஉலை எந்த நேரமும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி அந்த உலை நேற்று வெடித்தது. இதனால் மேலும் ஊழியர்கள் 6 பேர் பலியானார்கள். அணு உலையில் இருந்து புகை மண்டலம் கிளம்பிக்கொண்டியிருக்கிறது. அணுக்கதிர்வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.அணுக்கதிர் வீசினால் பாதிப்பு பெருமளவில் இருக்கும். அதனால் பழுதுபார்க்கும் பணியில் ஊழியர்கள் பாதுகாப்புடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து அணுநிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்