முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதியஅணையில் கூட்டுக்கட்டுப்பாடு பேச்சுக்கே இடமில்லை: அச்சுதானந்தன்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

திருச்சூர், ஜன. - 8 - புதிய அணை கட்ட அனுமதிக்கும் பட்சத்தில் அதன் கட்டுப்பாட்டு உரிமையை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்வது என்ற கேரள அரசின் முடிவுக்கு அச்சுதானந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  புதிய அணையின் கட்டுப்பாட்டு உரிமையை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கேரள மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறி உள்ளார். புதிய அணையை கட்டுவது, நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கேரளத்தின் வசமே இருக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே புதிய அணை கட்டும் பட்சத்தில் அதன் மீதான உரிமை தொடர்பாக கேரள அரசு எந்த அடிப்படையில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சென்னிதலா கூறியுள்ளார். கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசின் முடிவு குறித்து தனக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்றும் இது தொடர்பாக தான் விரைவில் முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்து பேசுவேன் என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்