முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்ராவில் உண்ணாவிரம் இருக்கிறார் நரேந்திர மோடி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத், ஜன. - 21 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மக்களிடம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி முக்கிய நகரங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதத்திற்கு குஜராத் மக்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது.  இதுவரை அவர் 25 ஊர்களில் நல்லிணக்க உண்ணாவிரதம் இருந்துள்ளார். நேற்று 26 வது முறையாக கோத்ரா நகரத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மோடியை வாழ்த்தினார்கள். 2002 ம் ஆண்டு கோத்ரா நகரில் ரெயில் பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட மத கலவரம் நாட்டையே உலுக்கியது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் கோத்ரா நகரில் மோடி உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கோத்ரா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரத மேடை பகுதியில் மட்டும் ஆயிரத்து 600 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் அதிரடி படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, நரேந்திர மோடி உண்ணாவிரதத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் அறிவித்திருந்தனர். அவர்கள் கோத்ரா நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. என்றாலும் தடையை மீறி சப்னா ஆஸ்மி உட்பட 6 பேர் கோத்ராவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். அவர்கள் 6 பேரும் மோடிக்கு எதிராக போட்டி உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு இருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்