முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநள்ளாறில் சனிப்பெயற்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

காரைக்கால் - சனிபகவான் இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அடுத்தமாதம் 16-ஆம் தேதி பிற்பகல் 2.45 துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார்.
இந்த விழா திருநள்ளாறு சனீஸ்வன் கோவிலில் பிரமாணடமாக நடக்கிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கோவிலுக்குள் சென்ற பகவானை தரிசனம் செய்ய வசதியாக பொது தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனங்கள் மற்றும் விஐபி தரிசனம் என்று 4 வகையான வரிசைகள் அமைக்கப்படுகிறது.
பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் வடக்கு வீதியில் அமைக்கப்படும் வரிசையில் நுழைந்து வசந்த மண்டபத்தில் தங்ககாக வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் சனீஸ்வரபகவான் உற்சவ மூர்த்தியையும், அடுத்து மூலவரையும் தரிசனம் செய்து விட்டு ராஜகோபுரத்திற்கு இடது பக்கம் உள்ள தீபம் எற்றும் இடத்தில் திலதீபம் ஏற்றி விட்டு மீண்டும் வடக்கு பக்க வாசல் வழியாக செல்லலாம்.
ரூ.200 கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் சன்னதி தெருவில் அமைக்கப்படும் வரிசையில் நுழைந்து ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்து மூலவரையும், உற்சவ மூர்த்தியையும் தரிசனம் செய்து விட்டு கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள வாசல் வழியாக வெளியே செல்லலாம். ரூ.500 கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்கு வீதியில் அமைக்கப்படும் வரிசை வழியாக கோவில் தெற்கு கோபுரவாசல் வழியாக கோவிலுக்குள் வந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, தியாகராஜர், அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்து விட்டு இறுதியாக பகவானையும், உற்சவ மூர்த்தியையும் தரிசனம் செய்து விட்டு மேற்கு வாசல் வழியாக வெளியே செல்லலாம்.
நளன் குளம் தூர்வாரப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 2 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து 24 பழைய தண்ணீரை வெளியேற்றி புதிதாக தண்ணீர் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்க நளன் குளத்தை சுற்றி 2 இடங்களிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டு குளோஸ்டு சர்க்யூட் வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கோவிலின் உள்பகுதி, வெளிப்பகுதி, நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நான்கு ராஜவீதிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் மொத்தம் 92 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து