முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெப்பர் சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

பெப்பர் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் – 1/2  கிலோ.
  2. சர்க்கரை – 1/2 ஸ்பூன்.
  3. கார்ன் பிளார் மாவு - 6 ஸ்பூன்.
  4. முட்டை - 2.
  5. பொடியாக நறுக்கியபூண்டு - 2 பல்.
  6. நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 7.
  7. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 100 கிராம்.
  8. மிளகாய் வத்தல் - 3.
  9. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்.
  10. மிளகு தூள் – ஒண்ணரை ஸ்பூன்.
  11. சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்.
  12. சோயா சாஸ் - 3 ஸ்பூன். 
  13. சிக்கன் மசாலா பொடி - ஒரு ஸ்பூன்.
  14. கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
  15. நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்.
  16. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  17. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 1/2  கிலோ சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தேவையான அளவு உப்பு,சர்க்கரை 1/2 ஸ்பூன்,கார்ன் பிளார் மாவு  3 ஸ்பூன் மற்றும் 2 முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி சிக்கனை நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  3. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  6. இப்போது அடுப்பில் இருந்து சிக்கனை இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் கார்ன் பிளார் மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய்யை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  9. எண்ணெய்  சூடானவுடன்  பொடியாக நறுக்கிய பூண்டு 2 பல் மற்றும் நீளமாக நறுக்கிய பச்சை 7 மிளகாய்யை போட்டு வதக்கவும்.
  10. இதனுடன் பொடியாக நறுக்கிய 100 கிராம் பெரிய வெங்காயம்,மிளகாய் வத்தல் 3 மற்றும் பொடியாக நறுக்கிய 100 கிராம் குடை மிளகாய்யை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து  விடவும்.
  11. இதனுடன் ஒண்ணரை ஸ்பூன் மிளகு தூள்,சோம்பு தூள்  1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு,சிக்கன் மசாலா பொடி ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் 3 ஸ்பூன் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள சிக்கனையும்  போட்டு நன்றாக வதக்கவும்.
  12. கரைத்து வைத்துள்ள கார்ன் பிளார் மாவு கலவையை ஊற்றி நன்றாக கலந்து  விடவும்.
  13. இதனுடன் கஸ்தூரி மேத்தி ஒரு ஸ்பூன் மற்றும் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து  விடவும்.
  14. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  15. சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்