முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக் செய்யத் தேவையான பொருட்கள். 

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
  2. சர்க்கரை - 50 கிராம்.
  3. மேங்கோ பவுடர் - ஒரு சிட்டிகை.
  4. கோதுமை மாவு -200  கிராம்.
  5. ஈஸ்ட் - 8  கிராம்.
  6. பால் - 50 மில்லி.
  7. பட்டர் - 50 கிராம்.
  8. கருப்பு எள்  - சிறிதளவு.
  9. எண்ணெய் - சிறிதளவு.
  10. உப்பு - தேவையான  அளவு.
Method: 

செய்முறை ;--

  1. 1/2 கிலோ உருளைக்கிழங்கை எடுத்து அதை தோல் சீவி சிப்ஸ் போல் சிறிது தடிமனாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கரை   வைத்து ஒரு லிட்டர் தண்ணீர்ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு குக்கரை மூடி போட்டு மூடி 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்கவும்.
  3. வேக வைத்த உருளைக்கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
  4. இதனுடன் 50 கிராம் சர்க்கரை,உப்பு தேவையான அளவு,மேங்கோ பவுடர் ஒரு சிட்டிகை,கோதுமை மாவு 200 கிராம்,ஈஸ்ட் 8 கிராம்,பால் 50 மில்லி,பட்டர் 50 கிராம் போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. தயார் செய்து வைத்துள்ள மாவை சப்பாத்திக்கு தட்டுவது போல் சிறிது  தடிமனாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் தவாவை வைத்து சிறிதளவு எண்ணெய்யை தேய்த்துக்கொள்ளவும்.
  7. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை போட்டு அதன் மேல் சிறிதளவு பட்டரை தடவி விட்டு வேக வைக்கவும்.
  8. இதன் மேல் சிறிதளவு கருப்பு எள்ளை போட்டு வேக வைக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
  10. சுவையான ஸ்வீட் உருளைக்கிழங்கு ரெடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்