முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு படை வீரர்களுக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக வெளியான புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மோசமான உணவு
எல்லைப் பாதுகாப்பு படையில் மிக மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச் செல்வதாகவும் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ் என்ற வீரர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் தங்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை உணவுகளையும் அந்த வீடியோவில் ஒவ்வொன்றாக காட்டி விளக்கினார். இது மிகவும் உருக்கமாக இருந்தது.

மற்றொரு வீரர் புகார்
படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற மற்றொரு வீடியோவும் எல்லைப்பகுதியில் நமது தாய்நாட்டை பாதுகாக்க கடமையாற்றும் வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

ஐகோர்ட் நோட்டீஸ்
இந்நிலையில், அந்த வீரரின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படையின் பிரிவுகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்