எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளுர் மணவாளநகர் கே.இ.நடேச செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியி;ல் தேசிய குடற்புழுக்களை நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கூறியதாவது "குடற்புழுத்தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகின்றது.
குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளிகளில் படிக்கும் (1 முதல் 12-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கும் வழங்கப்படும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் ½ மாத்திரை (200அப), 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை (400அப).திருவள்ளுர் மாவட்டத்தி;ல் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் மாத்திரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் , அங்கன்வாடி மையங்களிலும் ஆசிரியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் , சுகாதாரப் பணியாளர் மூலமாகவும் வழங்கப்படுகிறது. தேசிய குடற்புழு நீக்க நாளில் மாத்திரை பெற முடியாத குழந்தைகளுக்கு 15.02.2017 அன்று அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல் மாத்திரைகள்) உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்க வேண்டும் " என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.ஜே. பிரபாகரன், பயிற்சி மருத்துவர் மரு.தீபலட்சுமி,பள்ளி தலைமை ஆசிரியை இரா.வெற்றிசெல்வி,கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டி.பிரதிபா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |