முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் பெண்களுக்கு தலிபான்கள் புதிய உத்தரவு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      உலகம்
hijab-exams 2023-10-24

Source: provided

 காபூல் : ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு, பெண்களுக்கு எதிராக கடுமையான பல விதிமுறைகள் உருவாக்கப்பட்ட நிலையில், பெண்கள் முன்னிலையில், ஒரு பெண் சப்தமாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலிபான் அமைச்சர் வெளியிட்டிருக்கும் ஆடியோ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் தொழுகை நடத்தும்போது, நமது குரலை மற்ற பெண்கள் கேட்கும் வகையில் சப்தமாக குரானை ஓதக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில், பெண்கள் தக்பிர் செய்யவே அனுமதிக்கப்படாத நிலையில், அவர்கள் பிறகு எப்படி பாடுவதற்கு அனுமதிக்கப்படுவார் என்று அமைச்சரின் பதிவை குறிப்பிட்டு நேஷனல் போஸ்ட் கருத்துப் பகிர்ந்துள்ளது.

அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தில், பெண்களின் குரலும் பாதுகாக்கப்பட வேண்டியதுதான் எனவே அதனை வெளியாள்கள் கேட்பதற்கு அனுமதிக்கக் கூடாது, வெளியாள்கள் மட்டுமல்ல, வெளி பெண்களும் கூட என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு, பள்ளிச் செல்வது முதல் பெண்களுக்கு பல்வேறு தடைகளை பிறப்பித்து, ஐ.நா.வின் கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும், தொடர்ந்து பெண்களுக்கு எந்தவிதமான தடைகளை பிறப்பிக்கலாம் என்று சிந்தித்து அடுத்தடுத்த விதிமுறைகள் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து