முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை: இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      உலகம்
Matu-millar 2024-03-15

Source: provided

வாஷிங்டன் : எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் நுழைய முயன்றது. இரு நாட்டு வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கால்வான் பகுதியில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளின் உறவு சீர்குலைந்தது.

இதனால் நான்கு ஆண்டுகளாக எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் தான் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சில நாட்களாக இரு நாடுகளும் ராணுவத்தை வாபஸ் பெற்று வருகின்றனர். 

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் இருந்ததுபோல், எல்லையில் ரோந்துப் பணிகளில் இருநாட்டு ராணுவமும் மீண்டும் ஈடுபடும். இது குறித்து,  அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நிருபர்களிடம் கூறியதாவது: 

எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ராணுவ படைகளை வாபஸ் பெற்றதை நாங்கள் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து