முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைமேல் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளம் அருகே மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கைலாசநாதருக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அலங்காரம்  செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவமூர்த்தி கோவிலை மும்முறை வலம் வந்தது. பின்னர் கைலாசநாதருக்கும், அம்மனுக்கும் மஹா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கட்டளைதாரர் சிவக்குமார் சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து