முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு மீது பொதுநல வழக்கு: டெல்லி அரசின் மனு நிராகரிப்பு

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிக்கையை எதிர்த்து, டெல்லி அரசு பொது நல வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், பஞ்சாப், அரியானா, உ.பி.,யில் உள்ள 10 அனல் மின் நிலையங்களில் எப்.ஜி.டி., எனப்படும் அதிக மாசு வெளியிடாத நுட்பம் பின்பற்றப்படவில்லை. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது எனத் தெரிவித்து இருந்தது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், பொது நல வழக்கு என்பது தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்காட முடியாத மக்கள் சார்பில் இத்தகைய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்தப்படும்.  மத்திய அரசு முரணாக செயல்பட்டால் அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் (டெல்லி) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக மத்திய அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்திருப்பது விநோதமாகவும் வியப்பாகவும் உள்ளது. இதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தனர். இதையடுத்து மனுவைத் திரும்பப் பெறுவதாக மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் நீதிபதிகளிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து