முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-2 2022-08-15

நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.  தொடர்ந்து முதல்வர் பல்வேறு தரப்பினருக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்தார். 

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. அதன்படி செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை மீட்டு தொழில் முனைவோராக மாற்றியதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும் , திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்த செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கிய திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 

நீர் நிலைகளை மீட்டு எடுத்த அப்போதைய சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கும், பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டருக்கும், வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டன.

சிறந்த மாவட்ட கலெக்டர்களாக தினேஷ் பொன்ராஜ், அருண் தம்புராஜ் தேர்வாகி உள்ளனர். சிறந்த மருத்துவராக உதகையை சேர்ந்த ஜெய் கணேஷ் மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனமான புதுக்கோட்டையில் உள்ள ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூகப் பணியாளராக மதுரையை சேர்ந்த அமுத சாந்தி தேர்வாகி உள்ளார். மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம் என டாபே ஜெ ரிஹாப் சென்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து