எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மழை பாதித்த இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையின் மழை பாதிப்பு நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 1,800 பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளன. 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சென்னை பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 மின் நிலையங்களுக்கு மட்டும் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மின் நிலையங்களில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைய குறைய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 4 சதவீத பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை; விரைவில் நிலைமை முழுவதுமாக சரிசெய்யப்படும். உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மெட்ரோ ரெயில்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. சென்னையில் 85 சதவீத இடங்களில் செல்போன் சேவை சீரானது. இன்று மாலைக்குள் செல்போன் சேவை முழுமையாக சீராகும். குடிநீர் கேன்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கக்கூடாது. அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டாம்; தட்டுப்பாடு வராது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. வடசென்னையில் விரைவில் மின்விநியோகம் வழங்கப்படும்.
சென்னை புறநகரில் தேங்கிய தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. மிக்ஜம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை விரைவில் பழைய நிலைக்கு திரும்பும்.
மழை நீர் தேங்கிய 866 இடங்களில் 19 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அடையாற்றில் வெள்ளம் குறைந்தது. வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. புயல் மற்றும் மீட்பு பணிகளில் 75 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. வடியாத இடங்களில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் துவங்கவில்லை. பெரும்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பகுதிகளில் விரைவில் மின்சார இணைப்பு வழங்கப்படும்'' எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
13 Mar 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வ
-
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
13 Mar 2025சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: கோவை பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் வழக்கு
13 Mar 2025கோவை: கோவை பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப உபகரணங்களில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Mar 2025சென்னை: பட்ஜெட் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம் ஏன்?: தமிழ்நாடு அரசு விளக்கம்
13 Mar 2025சென்னை: தமிழக பட்ஜெட்டில் ரூபாய் இலச்சினை `₹' என்பதற்கு பதில் `ரூ' என மாற்றப்பபட்டதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இந்திய எல்லையில் பாக்., டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள்பறிமுதல்
13 Mar 2025ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த
-
உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா
13 Mar 2025மாஸ்கோ: உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தை ரஷியா கைப்பற்றியது.
-
முதல்முறை தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்..?
13 Mar 2025சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி முடிவு
13 Mar 2025புதுடில்லி, தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
ஒரு பவுன் ரூ. 65,000-ஐ நெருங்கியது:தங்கம் விலை புதிய உச்சம்
13 Mar 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 13) சவரனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்த்தை தொட்டுள்ளது.
-
போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
13 Mar 2025வாஷிங்டன், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்
-
ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை: டி வில்லியர்ஸ்
13 Mar 2025கேப் டவுன்: சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்
13 Mar 2025சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
பதிலளிக்க எம்.எஸ்.டோனி மறுப்பு
13 Mar 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 76 பேர் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்
13 Mar 2025காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
13 Mar 2025சென்னை: நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
-
டெல்லியில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
13 Mar 2025புதுடெல்லி, டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு
13 Mar 2025சென்னை, தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ளது.
-
நெல் மூட்டைகளை வைக்க கூடுதல் கிடங்குகளை அரசு கட்ட வேண்டும் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
13 Mar 2025சென்னை: கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கிடங்குகளை கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் டி.கே. சிவகுமார்
13 Mar 2025பெங்களூரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் டி.கே. சிவகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மொரிஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி
13 Mar 2025புதுடெல்லி: அரசுமுறைப் பயணமாக மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
13 Mar 2025காபுல்: ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 1.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
13 Mar 2025பெய்ஜிங்: திபெத்தில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.