எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளமான குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு சோதனை முறையில் ரோகிணி ராக்கெட் விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ரோகிணி ராக்கெட் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்வி. மார்க்-3 ஆகிய முக்கியமான ராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது 'ஆர்.எச்.200' என்று அழைக்கப்படும் 'சவுண்டிங்' ராக்கெட்டாகும். இந்த வகை ராக்கெட்டை பயன்படுத்தி காற்றின் திசை வேகம், ஒலியெழுப்பும் ராக்கெட்டுகளின் வளர்ச்சி, ராக்கெட்டுகளில் உயிர்வாழ்வு உள்ளிட்ட பல முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் நேற்று குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி சவுண்டிங் ராக்கெட் பிரதமர் முன்னிலையில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவிற்கான காரணம் தெரியவந்துள்ளது. இஸ்ரோவுக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் 'சதீஷ் தவான்' விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் 2வது ஏவுதளம் அமைக்க, தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில், 2,233 ஏக்கரில் இஸ்ரோ இடம் தேர்வு செய்யப்பட்டது.
குலசேகர பட்டினம் ஏன்?
1) ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும்.
2) ஏவப்படும் விண்கலம் தென்துருவத்தை நோக்கி, கிழக்குக் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும்.
3) ஏவுகலத்திலிருந்து பிரிந்து விழும் பாகங்கள் கடலில் விழ வேண்டும்.
4) பூமியின் சுழல் வேகம் 0.5 கி.மீ.,/ நொடி கூடுதலாகக் கிடைக்கும். இதனால், அதிக எடை கொண்ட விண்கலங்களை அனுப்ப முடியும்.
5) காற்றின் வேகம் 30 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும்.
6) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாக இருக்க வேண்டும்.
7) புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும்.
8) ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்களின் பாகங்கள், இலங்கையில் மக்கள் வசிப்பிடத்தில் விழாமல் இருக்க, 'Dogleg Maneuver' என்ற முறையில் வளைந்து செல்லும் படி அனுப்பப்படுகிறது. இதனால், எரிபொருள் செலவு கூடுகிறது.
9) பூமத்திய ரேகையில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் ஸ்ரீஹரிக்கோட்டா உள்ளது.
10) 8.36 டிகிரி வடக்கில் உள்ளது குலசேகர பட்டினம். இதனால், இங்கிருந்து ராக்கெட்களை ஏவினால் எரிபொருள் செலவு குறையும்.
11) ராக்கெட்டின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
12) குலசேகரபட்டின ஏவுதளம் அருகில், 'விண்வெளி தொழில் பூங்கா' தொடங்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |