Idhayam Matrimony

இந்தியாவின் முகமாகி விட்டார் பிரதமர் மோடி: அமெரிக்க எம்.பி. புகழாரம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      உலகம்
Modi-2024-04-11

வாஷிங்டன், பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகி விட்டாா் என்று அமெரிக்காவை சேர்ந்த  எம்.பி. பிராட்செர்மன் தெரிவித்துள்ளார். 

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட்சொ்மன், இந்தியா-அமெரிக்கா உறவின் மேம்பாட்டுக்காக கடந்த 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். 

இந்நிலையில்  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகி விட்டாா். அவரது ஆட்சியில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் அவா்களுக்கென சவால்கள் உள்ளன. 

ஒரு நாட்டின் வெற்றி ஒரு தலைவரை மட்டும் பொறுத்ததில்லை. இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை மிகவும் வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

அமெரிக்கா - இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளது. ராணுவ உளவுப் பகிா்வு மற்றும் இந்தோ - பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு துறையில் நமது உறவு வலுவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. 

அதே சமயம், ரஷ்யாவுடன் இந்தியா பாதுகாப்பு உறவைத் தொடர்கிறது. இது அமெரிக்கா - இந்தியா உறவில் சவாலாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி நிறுவப்படாத நாடுகளை விட வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளது குறித்து துறை சாா்ந்த பலரிடம் நான் கேட்டறிந்துள்ளேன்.

நியாயமான மற்றும் நோ்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, வேறு சில நாடுகள் வழங்காத சலுகைகளை இந்தியா வழங்குகிறது.  

நமது இருதரப்பு வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவில் தொழில்முனைவோா்கள் நிறைந்த லாஸ் ஏஞ்சல்சில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவா்கள். அமெரிக்காவில் வசிக்கும் மற்றவா்களைவிட அதிக வருமானம் பெறுபவா்களாக விளங்குகின்றனா். இவ்வாறு பிராட்செர்மன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து