முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாகிறது

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை :  என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளிவந்தும் இன்னும் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. 

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மீது சி.பி.ஐ. நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு வழக்கு என பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன. நீட் தேர்வு குறித்து டெல்லியில் உள்ள மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் இன்னும் ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.

அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் எம்.பி.பி.எஸ். மட்டுமின்றி பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி, நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த படிப்புகளில் சேருவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ. போன்ற மருத்துவ ஏஜென்சிகளிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தும் மத்திய சுகாதார இயக்குனரகம் முதல் கட்ட கலந்தாய்வை முடித்ததும் தமிழகத்தில் முதல் சுற்று தொடங்கப்படும். 

அது 2-வது சுற்று தொடங்கும் போது நாங்கள் முதல் சுற்றை முடித்து விடுவோம். இதன் மூலம் மாணவர்கள் 2 சுற்றுகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீட் தேர்வு முடிவு வெளி வந்து ஒரு மாதமாகியும் இன்னும் கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற முடியாமல் மாநில அரசு உள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

இதற்கிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 13-ல் தொடங்கி 30 வரை நடந்தது. அதையடுத்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

வருகிற 10-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து