முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் மருத்துவமனை உட்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்: 36 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      உலகம்
Ukraine 2024-07-09

கீவ், குழந்தைகள் மருத்துவமனை உட்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியானார்கள். 

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நேற்று 865-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. 

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து ரஷ்யா நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து