முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் இருமுறை பதவியேற்ற பா.ஜ.க. அமைச்சரால் குழப்பம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      இந்தியா
Ramniwas-Rawat  2024-07-08

Source: provided

போபால் : பா.ஜ.க. அமைச்சர் ராம்நிவாஸ் ராவத்தின் பதவியேற்பில் தவறான உச்சரிப்பால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவர் ஒரே நாளில் இருமுறை பதவியேற்றுக்கொண்ட நிகழ்வு நடந்தேறியது.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ராம்நிவாஸ் ராவத், நேற்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். ஆனால், பதவியேற்பின்போது, ராம்நிவாஸ் அமைச்சர் பதவியைத் தவறாகப் படித்ததால், ராம்நிவாஸ் இணையமைச்சரா? அல்லது கேபினெட் அமைச்சரா? என்ற குழப்பம் எழுந்தது.

இதனையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில், ராம்நிவாஸ் மீண்டும் கேபினெட் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ராம்நிவாஸுக்கு முதல்வர் மோகன் யாதவ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், ராம்நிவாஸ் ஒரேநாளில் இரண்டு முறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், ராம்நிவாஸ் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வில் கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தார். இருப்பினும், அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை இன்னும் ராஜிநாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து