முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      தமிழகம்
Pudhucherry-2023-03-23

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகள் மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த நா. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வருகிற 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட மதுபான கடைகள் நேற்று, இன்று, நாளை ஆகிய 3 நாட்கள் மூடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான 13-ம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து