முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களுக்கு சோப்ரா அறிவுரை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      விளையாட்டு
Neeraj-Chopra 2023-09-01

Source: provided

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வெளிநாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), நிஜாத் ஜரீன் (குத்துச்சண்டை) ஆகியோர் ஆன்லைன் மூலம் பிரதமருடன் உரையாடினார்கள்.

இதில் இந்திய தடகள அணியின் தலைவர் நீரஜ் சோப்ரா ஆன்-லைன் மூலம் உரையாடுகையில் 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது முதல் ஒலிம்பிக் ஆகும். அதில் எனக்கு தித்திப்பான முடிவே கிடைத்தது. நான் நாட்டுக்காக தங்கம் வென்றேன். அப்போது என் மனதில் எந்த பயமும் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் இருந்தது. ஏனெனில் நான் நன்றாக பயிற்சி எடுத்திருந்தேன். நான் அனைத்து வீரர்களுக்கும் சொல்வது என்னவென்றால் யாரை கண்டும், எதனை நினைத்தும் பயப்படாதீர்கள். நாம் அனைவரும் நீண்ட காலமாக வீட்டை மறந்து கடினமாக பயற்சி எடுத்து வருகிறோம். அதனால் நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது' என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

___________________________________________________________________________________

காலிறுதியில் லோரென்சோ 

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, பிரான்சின் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட் உடன் மோதினார். 

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த லோரென்சோ முசெட்டி, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் லோரென்சோ முசெட்டி 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

___________________________________________________________________________________

அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து 

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன்னும், கெய்க்வாட் 77 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 235 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சிங் வாழ்த்து கூறினார். அபிஷேக் சர்மாவிடம் யுவராஜ் சிங் கூறியதாவது, "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என கூறினார்.

___________________________________________________________________________________

ரோகித், கோலிக்கு எவ்வளவு?

பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது.  இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதன்படி, கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கும் இதே பரிசுத்தொகைதான் கிடைக்கும்.

அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்படவுள்ளது.

___________________________________________________________________________________

தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மார்கோ யான்செனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரின்னே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து