முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் மேலும் தாமதம்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      இந்தியா
Mbbs-Counseling 2023-08-17

Source: provided

புதுடெல்லி : நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை (ஜூலை 8ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ள நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது.

இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்துள்ளனர். சுமார் 26 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை (ஜூலை 8ம் தேதி) சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ள நிலையில், நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இளநிலை நீட் கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் சில புதிய மருத்துவ கல்லூரிகள் சேர்ப்பதற்கான வேலை இன்னும் நிறைவடையாத நிலையில் கவுன்சிலிங் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவ கல்லூரி சேர்த்த பின்னர் இளநிலை மருத்துவ கவுன்சிலிங் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து