முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2024-06-10

Source: provided

மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 

பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மராட்டிய மாநிலத்திற்கு சென்றார்.  நாண்டெட் விமான நிலையத்திற்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வாஷிம் பகுதிக்கு சென்றடைந்தார். அங்குள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்த பின்னர் சந்த் சேவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராமாராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 

அதனை தொடர்ந்து பஞ்சாரா சமூகத்தினரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்த பஞ்சாரா விராசத்த் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். 

தொடர்ந்து நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். மேலும் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். 

அதோடு 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை  பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மொத்த வருவாய் சுமார் 1,300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகள் தொடர்பான ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

மேலும் மராட்டிய மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட 5 சோலார் பூங்காக்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மராட்டிய அரசின் பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளை பிரதமர் மோடி கவுரவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து