முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைதி நாட்டில் கலவரம் - 70 பேர் பலி

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      உலகம்
Haiti 2024-10-05

Source: provided

போர்ட்-அயு-பிரின்ஸ் : ஹைதி நாட்டில் கலவரத்தில் 70 பேர் வரையில் பலியானதாக ஐ.நா.வின் மனித உரிமைகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கரீபிய தீவு நாடான ஹைதியின் பான்ட்-சோண்டேவில் வியாழக்கிழமையில் (அக். 3) நடந்த கலவரத்தில் 70 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், இதுபோன்ற கலவரங்கள் ஹைதி நாட்டில் சாதாரணமானவைதான் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், தற்போது நடந்த பான்ட்-சோண்டேவில் பகுதிகளில் கலவரம் அசாதாரணமானது என்றும் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், புதிதாய்ப் பிறந்த குழந்தை உள்பட பலியாகியுள்ளனர். கலவரத்தை ஏற்படுத்திய கும்பல், வன்முறையின் போது 45 வீடுகளுக்கும் 34 கார்களுக்கும் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படுகொலையின் பின்னணியில் உள்ள நோக்கம், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதல் நடந்த பகுதிகள் முழுவதும், அந்த கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சுற்றிலும் காவல் படையை ஹைதி அரசு நிறுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருந்ததால், மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளையும் அரசு அனுப்பியது. அதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் ஒட்டுமொத்த ஹைதி நாட்டின் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து