முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்: பிரிட்டன் புதிய பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரையாடினார்.

பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் 58-ஆவது பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியெர் ஸ்டார்மர் (61) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கியெர் ஸ்டார்மருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இருநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடலின்போது, இருநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும், வளமைக்காகவும், உலக நன்மைக்காகவும் இந்தியா- பிரிட்டன் ஒருங்கிணைந்த பங்களிப்பையும், பொருளாதார உறவையும் வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக இந்திய சமூகம் அளித்துவரும் நேர்மறையான பங்களிப்புகளை பாராட்டியுள்ள அவர்கள், இரு நாட்டு மக்களிடையே நெருக்கமான உறவை தொடர வேண்டுமென்பதையும் வலியுறுத்திக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து