முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் வெள்ள பாதிப்பு: 24.50 லட்சம் பேர் தவிப்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      இந்தியா
Assam 2024-07-03

Source: provided

குவாகாத்தி : அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது. முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்கிற நிலையில் மாநிலத்தில் 30 மாவட்டங்களில் 24.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் மின்னல் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட திப்ருகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு விட்டு திரும்பிய மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வெள்ளிக்கிழமை இரவில் வெள்ள நிவாரணம் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் முதல்வர் கூறியதாவது: திப்ருகர் மாவட்டத்தில் ஆய்வு செய்து திரும்பிய பின்னர், சுகாதார நிதி உதவி திட்டமான, அசாம் ஆரோக்கியா நிதி உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம்.

மிகவும் அரிதான சம்பவங்கள் மற்றும் வேறு எந்த திட்டத்திலும் வராதவர்களின் விண்ணப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தவரை செயல்திறன் மிக்க நிர்வாகமே சிறந்த பொது சேவைக்கு முக்கியமானதாகும். சுத்தமான குடிநீர் விநியோகத்தைப் பொறுத்த வரை மாநிலம் முழுவதும் வெள்ளம் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜல் ஜீவன் திட்டம் இந்த கடினமான காலத்தில் ஒரு வெள்ளிக்கோடாக வந்துள்ளது. மாற்று குடிநீர் வழங்கல் திட்டம் இந்த இக்கட்டான நேரத்தில் சுத்தமான குடிநீர் வழங்குகிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து