முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளராக நான், ரோகித்திடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை : ராகுல் டிராவிட் பேட்டி

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      விளையாட்டு
Dravid 2023 07 30

Source: provided

மும்பை : இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

பணிக்காலம் நிறைவு... 

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. உலகக் கோப்பை நிறைவடைந்ததோடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பணிக்காலமும் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேப்டன் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு விஷயத்தையும் மாற்ற முயற்சிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மாற்றவில்லை... 

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியதாவது., தொடர்ச்சியாக ஒரு விஷயம் நடைபெறுவதை விரும்பும் நபரான நான், இந்திய அணியில் நிறைய விஷயங்களை மாற்றவில்லை. ஏனெனில், நிறைய விஷயங்களை மாற்றினால் அணியின் வலிமை பாதிக்கப்படும். அணியில் சிறப்பான சூழல் நிலவாது. அணியில் ஒரு அங்கமாக இருக்கும் நான், வீரர்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமென்று நினைத்தேன்.

பெரிய பொறுப்பு... 

கொரோனா பேராபத்துக்கு பிறகு அணியின் பயிற்சியாளராக பதவியேற்றேன். கொரோனாவுக்கு பிறகு, 3 வடிவிலான போட்டிகளுக்குமான அணியின் வேலைப்பளுவை சரிவர நிர்வகிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. ரோகித் சர்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ரோகித் சர்மாவை இளம் வயதிலிருந்தே எனக்குத் தெரியும். கடந்த 10-12 ஆண்டுகளாக ஒரு வீரராகவும், கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அதிக பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அணியின் பயிற்சியாளராக அவரிடம் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கவில்லை. கேப்டனாக அவரது தனித்தன்மையுடன் அணியை வெற்றி பெற செய்ய அவருக்கு உதவினேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து