முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண்: ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது இந்தியா

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

ஹராரே : அனுபவம் இல்லாத இந்திய இளம் அணி முதல் டி-20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது 

பந்துவீச்சு தேர்வு...

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 115 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 29 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

கடும் நெருக்கடி... 

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவமில்லாத இந்த இளம் இந்திய அணிக்கு, உள்ளூர் சாதகத்தை பயன்படுத்தி ஜிம்பாப்வே கடும் நெருக்கடி அளித்தது. இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா அறிமுகன் ஆன முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து கெய்க்வாட் 7, ரியான் பராக் 2 துருவ் ஜூரெல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய சுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதோடி இந்திய அணியின் வெற்றி கனவும் முடிவுக்கு வந்தது.

102 ரன்களில் அவுட்...

இறுதி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் போராடி பார்த்தும் பலனில்லை. 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 102 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரசா மற்றும் சதாரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து