முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் 2 மணி நேரம் விசாரணை

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      தமிழகம்
Nly Cong 2024-05-04

Source: provided

திசையன்விளை : ஜெயக்குமார் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இதற்கிடையே திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு தலா 2 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.

இதனால் கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையிலேயே ஒரு வேன் மற்றும் 3 ஜீப்புகளில் திசையன்விளை சென்று விசாரணையை தொடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து