முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: பிரான்ஸில் வெடித்த கலவரம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      உலகம்
France-1 2024-07-08

Source: provided

பாரிஸ் : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் இடதுசாரிக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது நிலையில் பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது.

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் அறிவிப்பட்டுள்ள நிலையில், இடதுசாரி முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான செண்ட்ரிஸ்ட் கட்சி 2வது இடத்திலுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற வலதுசாரி கட்சிகள் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் பல ஆண்டுகளுக்கு பின் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமைய உள்ளது ஐரோப்பிய அரசியல் வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து, பிரான்சில் வலதுசாரி சித்தாந்தங்களைப் பின்பற்றும் மரைன் லீ பென்னின் ‘தேசிய பேரணி கட்சி’ அதிகாரத்தை கைப்பற்றுமென்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவியது. அதன்படி, பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றது.

இதனிடையே, முடிவுகள் அறிவிப்படும் முன் தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி, இடதுசாரிக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது வலதுசாரி ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் மூண்டது. தலைநகர் பாரிஸில் கலவரக்காரர்கள் சாலைகளில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து