முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. துவக்க விழா குறித்து வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாணுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் அ.தி.மு.க.வின் 53-வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து, எம்.ஜி.ஆர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர்,

 எம்.ஜி.ஆர் மீது எனக்குள்ள அன்பும் அபிமானமும் இன்னும் அப்படியே இருக்கிறது. அ.தி.மு.க.வின் 53-வது தொடக்க நாளான அக்டோபர் 17-ம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 

சமத்துவம், சமூகநீதி தழைக்க, சாதி, மதசார்பற்று அனைவரும் அனைத்தும் பெற,  எம்.ஜி.ஆர் கண்டெடுத்து,  ஜெயலலிதா வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் அ.தி.மு.க.வின் 53-வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து