முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: அதிபர் ஜோ பைடன் ஆவேசம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      உலகம்
Joe-Biden 2023 04 11

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார். 

இது குறித்து பேசிய அதிபர் ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன். ஊடகம் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளேன். 

இந்த பந்தயத்தில் இறுதி வரை ஓடிக் கொண்டே இருப்பேன். டொனால்ட் டிரம்பை வீழ்த்துவேன். ஜனநாயக கட்சி சார்பில் இறுதி வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் 42 நாட்களும், பொது தேர்தல் துவங்க 119 நாட்களும் உள்ளன. 

எதிர்காலம் பற்றிய தெளிவின்மை மற்றும் தீர்மானங்களில் பலவீனம் ஏற்பட்டால் அது டிரம்புக்கு சாதகமாக மாறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த தருணத்தில் நாம் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கட்சியாக டொனால்ட் டிரம்பை வீழ்த்த வேண்டும்  என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து