முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெருவில் வசித்த பெண்ணுக்கு புதிய வீடு பரிசளித்த பிரபலம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      உலகம்
America 2024 07 22

Source: provided

அமெரிக்கா : ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது. வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன்.

அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது. சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து