முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு தர்மசங்கடமானவர்கள் ஜோபைடன், கமலா ஹாரிஸ்: டிரம்ப் கருத்து

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      உலகம்
Trump

வாஷிங்டன்,  அமெரிக்காவுக்கு ஜோபைடன், கமலா ஹாரிஸ் தர்மசங்கடமானவர்கள் என்று குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதே சிறந்தது என நான் முடிவு செய்தேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க இதுவே சிறந்த தருணம். அமெரிக்காவை மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தது இல்லை. மக்கள் தான் ஆட்சி புரிந்தனர்  என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் அலுவலகத்தில் இருந்து ஜோ பைடன் ஆற்றிய உரையானது அரிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் மோசம். ஜோ பைடன் மற்றும் பொய் சொல்லும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்காவிற்கு தர்மசங்கடமானவர்கள். இது போன்று காலம் எப்போதும் இருந்தது இல்லை. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து