எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன. இந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க்கை ஃபாப் டு பிளெஸ்ஸி தலைமையிலான டிஎஸ்கே அணி வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் 20 ஓவர் முடிவில் 163/8 ரன்கள் எடுத்தது. டிஎஸ்கே அணி 18.3 ஓவரில் 167/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டு பிளெஸ்ஸி 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். டிஸ்கே அணியில் கான்வே 51*, ஆரோன் ஆர்டி 40 *ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு பொல்லார்டை பிராவோ கிண்டல் செய்தார். மற்றுமொரு பிளே ஆஃப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணியும் கம்மின்ஸ் தலைமையிலான சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியும் மோதுகின்றன.
டு பிளெஸ்ஸி புதிய சாதனை
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களாக விளையாடியிருந்த டு பிளெஸ்ஸி தற்போது ஆர்சிபி அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். தற்போது எம்எல்சி எனப்படும் டி20 லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். பிளே ஆஃப் சுற்றில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றுள்ளார். தனது டி20 கிரிக்கெட்டில் இதுவரை 380 போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெஸ்ஸி 10,500 ரன்களை எட்டியுள்ளார். இதில் 6 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் டு பிளெஸ்ஸி 14ஆவது இடத்தினை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 12,886 ரன்களுடன் 4ஆவது இடத்திலும் ரோஹித் சர்மா 11,830 ரன்களுடன் 8ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களில் டு பிளெஸ்ஸி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 26 ரன்கள் முன்னிலையில் டேவிட் மில்லர் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 1. கிறிஸ் கெயில் - 14,562, 2. சோயிப் மாலிக் - 13,360, 3. கைரன் பொல்லார்ட் - 12,963, 4. விராட் கோலி - 12,886, 5. அலெக்ஸ் ஹேல்ஸ் - 12,783.
ஏஞ்செலிக் கெர்பர் ஓய்வு
பிரபல டென்னிஸ் வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பர் (36) நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார் கெர்பர். அதன் பிறகு 2019-இல் இரு போட்டிகளில் பங்கேற்று இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றார். சமீபத்தில் டென்னிஸ் வரலாற்றில் தனது 14-ஆவது பட்டத்தை வென்றார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஞ்செலிக் கெர்பர் கூறியதாவது., ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன்பே பாரீஸ் 2024ஐ மறக்க முடியாதெனக் கூறியிருந்தேன். ஏனெனில் இதுதான் எனது கடைசி டென்னிஸ் தொடர். இதுதான் சரியான முடிவாக இருக்குமென நினைக்கிறேன். எனது இதயம் முழுக்க இந்த விளையாட்டாக நேசிக்கிறேன். இந்த அற்புதமான நினைவுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் மிக்க நன்றி. இந்த ஒலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்பது ஒரு டென்னிஸ் வீராங்கனையாக எனது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை அதாவது ஏறுவது (2012), உச்ச நிலை (2016), தற்போது இறுதிக் கோடு (2024) என எடுத்துரைப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். வரும் 27 முதல் ஆக.4ஆம் தேதி வரை ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் தொடர் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரர் விலகல்
இந்தியா - இலங்கை மோதும் டி20 ஆட்டங்கள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளன. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி, திங்கள்கிழமை இரவு இலங்கை சென்றடைந்தது. அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் பெரெரா (வி.கீ.), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (வி.கீ.), தினேஷ் சண்டிமல், கமிண்டு மெண்டிஸ், தசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெலாலகே, மஹீஷ் தீக்ஷனா, சமிண்டு விக்ரமசிங்கே, மதீஷா பதிரானா, நுவன் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ.
இதிலிருந்து ஏற்கனவே சமீரா வெளியேறியுள்ள நிலையில் தற்போது நுவன் துஷாரா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். ஃபீல்டிங் பயிற்சியின்போது இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதை இலங்கை அணியின் மேலாளர் மஹிந்த ஹலன்கோடாவும் உறுதி செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நுவன் துஷாரா 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவரும் மலிங்கா ஸ்டைலில் பந்து வீசுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மதீஷா பதிரானா இப்படி பந்து வீசி பிரபலமானார். இவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2024.
04 Nov 2024 -
ரஷ்யாவின் தாக்குதலில் ஒரே நாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் உயிரிழப்பு
04 Nov 2024மாஸ்கோ : குர்ஷ்க் மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
ராணுவ வீரர் இயக்கும் புதிய படம்
04 Nov 2024டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
-
இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல் : கனடா பிரதமர் ட்ரூடோ கண்டனம்
04 Nov 2024ஒட்டவா : கனடாவின் பிராம்டனில் உள்ள இந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் 7 மாநிலங்கள்
04 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 7 முக்கிய மாநிலங்களில் மட்டுமே உண்மையான போட்டி நிலவுவதாக நிபுணர
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
04 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கடும் அமளியுடன் தொடங்கியது காஷ்மீரில் சட்டசபை முதல் கூட்டம் : சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்
04 Nov 2024ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.
-
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங்
04 Nov 2024'குட் நைட்', 'லவ்வர்' ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி.
-
கந்தசஷ்டி 3-ம் நாள்: திருச்செந்தூரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
04 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவின் 3-ம் நாளான நேற்று திரண்ட பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம் : எல்காட் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
04 Nov 2024கோவை : முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா?
-
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க. அழிய வேண்டும் என நினைக்கின்றனர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
04 Nov 2024சென்னை : தி.மு.க. வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிது, புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்று கூறுகின்றனர்.
-
காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு
04 Nov 2024ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
-
பிரிஸ்பேனில் இந்திய தூதரகம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
04 Nov 2024பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய துணை தூதரகத்தை நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
-
திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழர்கள் 2 பேர் நியமனம்
04 Nov 2024திருமலை : திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது இதில் தெலுங்கானாவில் இருந்து 5 பேரும், தமிழகத்
-
சபரிமலை கோவிலில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்
04 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் : 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார் சந்திரபாபு நாயுடு
04 Nov 2024திருப்பதி : ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் அறிமுகம் செய்யப்படுகிறது.
-
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: நகரம் முழுவதும் புகை மண்டலம்
04 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
-
திட்டப்பணிகள் குறித்து ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி இன்று விழுப்புரம் பயணம்
04 Nov 2024விழுப்புரம் : பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரத்திற்கு செல்கிறார்.
-
3 மாநில சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் 20-ம் தேதிக்கு மாற்றம் : தேர்தல் ஆணையம் உத்தரவு
04 Nov 2024புதுடெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம
-
கனமழைக்கு 217 பேர் பலி: பார்வையிட வந்த ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை அள்ளி வீசி மக்கள் எதிர்ப்பு
04 Nov 2024மாட்ரிட் : வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற ஸ்பெயின் மன்னர் பிலிப் மற்றும் அவரது மனைவி ராணி லெட்டிஸியா மீது மக்கள் சேற்றை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.&nb
-
லக்கி பாஸ்கர் விமர்சனம்
04 Nov 2024வங்கி ஒன்றில் நேர்மையான காசாளராக வேலை பார்க்கும் பாஸ்கர், குடும்ப சூழல் காரணமாக நேர்மை தவறும் சூழல் உருவாகிறது.
-
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு : மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு
04 Nov 2024டேராடூன் : உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியானார்கள்.
-
எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி: மராட்டிய டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
04 Nov 2024மும்பை : எதிர்க்கட்சிகள் அளித்த புகாரை தொடர்ந்து மாநில டி.ஜி.பி.
-
அமரன் படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்
04 Nov 2024சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தைப் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
-
ஜார்க்கண்டில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சி இருக்கும் : பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி
04 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த பிறகு, மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.