முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலீப் டிராபி செப்.5-ல் தொடக்கம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023 08-07

Source: provided

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முக்கியமானதில் ஒன்று துலீப் டிராபி. இந்தத் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது.  இந்த தொடரின் முதல் போட்டியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இந்த போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நடத்துகிறது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக துலீப் டிராபி இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சர்வதேச வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு உள்நாட்டு போட்டியில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சுப்மன் கில், ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகிறது.

_____________________________________________________________________

வைரலாகும் நீரஜ் - பாக்கர் விடியோ

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், மனு பாக்கர் இரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தனர். 2024 ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு வீரர்கள் இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பு, பாரீஸில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்துக்கொண்டனர். அப்போது நீரஜ் சோப்ரா, மனு பாக்கரையும் அவரின் தாயாரையும் சந்தித்துப் பேசினார். அவர்கள் பேசிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் இருவரும் பேசிக்கொள்ளும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், வெட்கத்துடன் பேசுவதைப் போன்று உள்ளது. இந்த விடியோவைப் பகிர்ந்தவர்களும் இதனைக் குறிப்பிட்டு, எதிர்கால விளையாட்டுத் துறை தம்பதிகள் - இந்தியாவில் எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரிடம் பேசும்போது இவ்வாறு இருப்பது இயல்பு - என்பன போன்ற கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

_____________

ரோகித், கோலி குறித்து ஹர்பஜன் சிங்

இந்திய அணிக்காக ரோகித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகளும், விராட் கோலி 5 ஆண்டுகளும் விளையாடுவார்கள் என நம்புவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் ரோகித் சர்மா தாரளமாக விளையாடலாம். 

விராட் கோலி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக விளையாடலாம். விராட் கோலி மிகுந்த உடல் உறுதியுடன் இருக்கிறார். அணியில் உள்ளவர்களிலேயே விராட் கோலிதான் மிகுந்த உடல் உறுதியுடன் இருப்பவர் என நினைக்கிறேன். 19 வயது இளைஞரைக் கூட விராட் கோலி உடல் உறுதியில் தோற்கடித்து விடுவார். அந்த அளவுக்கு அவர் உறுதியாக இருக்கிறார் என்றார்.

_____________________________________________________________________

நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பின், இலங்கைக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் முறையே செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்., டிம் சௌதி (கேப்டன்), டாம் பிளண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மாட் ஹென்றி, டாம் லாதம் (துணைக் கேப்டன்), டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க்கி, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.

_____________________________________________________________________

நதீமுக்கு எருமை மாடு பரிசு

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.

ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார். மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் தெரிவித்தார். இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கினார். அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. 'மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்' என அவரது மாமனார் பெருமிதமாக தெரிவித்தார். நவாஸின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

_____________________________________________________________________

புதிய கார் வாங்கிய முகமது சிராஜ்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர். 

அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார். புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து