முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் திரைப்படமாகிறது யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Yuvraj-Singh 2024-08-20

Source: provided

மும்பை : யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று (ஆக. 20) காலை வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் யுவராஜ் சிங் கதாபாத்திரம் ஏற்கப்போவது யார்? என்ற கேள்விதான் இப்போது சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் பலரின் சந்தேகமாக எழுந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக...

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் எம். எஸ். டோனியை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறும், விரைவில் திரைப்படமாக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி-சீரிஸ் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கதில் வெளியிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் யுவராஜ் சிங் கதாபாத்திரம் ஏற்று நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதுகெலும்பாக...

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து, இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முதுகெலும்பாக விளங்கியவர் யுவராஜ் சிங். கிரிக்கெட் விளையாட்டில் முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் வலம் வந்த யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் தீவிர சிகிச்சை எடுத்து மீண்டு வந்துள்ளார். இதன் காரணமாக கிரிக்கெட் மட்டுமன்றி பிற விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் யுவராஜ் சிங் மீது தனி அபிமானம் எப்போதுமே உண்டு. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ள யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து